இந்திய திரையுலக வரலாற்றில் அதிக பொருட்செலவில் தயாராகியிருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்தின் டீஸர் இன்று திட்டமிட்டப்படி வெளியானது.

இதில் வழக்கம் போல் இயக்குநர் ஷங்கரின் பிரம்மாண்டம் கண்களை அகலவிரியச் செய்தது. இதனை பார்த்தவர்கள் ஷங்கர் ஷங்கர் தான் என்று பாராட்டு தெரிவித்து வருகிறார்கள். எந்திரன் படத்தின் அடுத்த பாகமாக வெளியாகியிருக்கும் இந்த 2 பொயிண்ட் ஓ படம் நவம்பர் 29 ஆம் திகதியன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், பொலிவூட் நடிகர் அக்சய்குமார், எமி ஜேக்சன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார்.

இணையத்தில் வைரலாகி, டிரெண்டிங்கில் இருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்தின் டீஸரை முப்பரிமாண கோணத்தில் பார்த்தவர்கள் அனைவரும் பார்த்து வியக்கிறார்கள்.