வீடமைப்பு திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிப்பு

Published By: Sivakumaran

13 Sep, 2018 | 11:30 AM
image

முல்லேரியா, மண்டாவில நடுத்தர வருமானமுடையோருக்கான Lake Crest Residencies வீடமைப்பு திட்டம் ஜனாதிபதியினால் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

தெளிவான தேசிய திட்டத்தின் அடிப்படையில் செயற்படுத்தப்படும் வீடமைப்பு கொள்கையினால் இலங்கையில் சகல குடும்பங்களுக்கும் அடிப்படை வசதிகளுடன்கூடிய பாதுகாப்பான இல்லமொன்றை வழங்கும் செயற்திட்டத்தை தற்போதைய அரசாங்கத்தினால் யாதார்த்தமாக்கிக் கொள்ள முடிந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.  

முல்லேரியா, மண்டாவில பிரதேசத்தில் அமைக்கப்பட்டுள்ள நடுத்தர வருமானமுடையவர்களுக்கான Lake Crest Residencies வீடமைப்பு திட்டத்தை நேற்று பிற்பகல் மக்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். 

மாநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் வழிகாட்டலின் கீழ் நகர அபிவிருத்தி அதிகார சபையின் “நகர மறுமலர்ச்சி” செயற்திட்டத்தின் திட்டமிடல் மற்றும் நிதி உதவியுடன் நிர்மாணிக்கப்பட்டுள்ள  குறித்த அடுக்குமாடி வீடமைப்புத்திட்டம் 500 வீடுகளை கொண்டுள்ளது. 

நாட்டின் பிரதான நகரங்களை அண்மித்து, நகரமயமாகிவரும் பிரதேசங்களில் அரச மற்றும் தனியார் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு அவர்கள் பணிபுரியும் பிரதேசத்தை அண்மித்த தங்குமிட வசதிகளுக்காக பெருந்தொகை பணத்தை செலவிட முடியாத பணியாளர்கள், முகாமைத்துவ அதிகாரிகள், ஊடகவியலாளர்கள், தொழில்நுட்பத்துறை அதிகாரிகள் போன்ற பதவிகளை வகிக்கும் பணியாளர்களை இலக்காகக்கொண்டு இச்செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீடுகளை பெற்றுக்கொள்வதற்காக வங்கி கடன் வசதிகளை ஏற்படுத்தியுள்ளமையும் விசேட அம்சமாகும்.

05 ஏக்கர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இவ்வீடமைப்புத் திட்டம் 05 அடுக்குமாடி குடியிருப்புகளைக் கொண்டுள்ளதுடன், குடிநீர், மின்சாரம், போக்குவரத்து வசதிகள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் உள்ளிட்ட நவீன வசதிகளையும் கொண்டுள்ளது. 

442 சதுர அடிகளை கொண்ட ஒரு இல்லம் 02 படுக்கை அறைகள், வரவேற்பறை, குளியலறை, சமையலறை உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டுள்ளது. 

சர்வ மதத் தலைவர்களின் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வைத்த ஜனாதிபதி நிகழ்வை அடையாளப்படுத்தும் வகையில் ஒரு இல்லத்தை திறந்து வைத்த்துடன், வீடமைப்புத் தொகுதியையும் சுற்றி பார்வையிட்டார். 

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி இந்நாட்டில் வீடுகளையும் கட்டடங்களையும் நிர்மாணிப்பதில் கொள்கை ரீதியாக காணப்பட்ட பலவீனங்களை சிலர் தவறான முறையில் பயன்படுத்தியதன் காரணமாக பல்வேறு பிரச்சினைகள் நாட்டில் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

அதிகரித்து செல்லும் சனத்தொகைக்கு நிகராக நிலப்பரப்பு அதிகரிக்காது என்று தெரிவித்த ஜனாதிபதி தேசிய உணவு உற்பத்தி உள்ளிட்ட விவசாயத்திற்கான நிலத்தையும் வன அடர்த்தியையும் பாதுகாப்பதுடன், கட்டடங்கள் மற்றும் வீடுகளை அமைப்பதற்கு நாடளாவிய ரீதியில் தெளிவான கொள்கையை கடைப்பிடிப்பதன் முக்கியத்துவத்தையும் சுட்டிக்காட்டினார்.

தெளிவான அரச கொள்கையின் கீழ் திட்டங்களை செயற்படுத்தியதால் கடந்த மூன்றரை வருடங்களாக தற்போதைய அரசாங்கம் பல வெற்றிகளை பெற்றுள்ளதாக தெரிவித்த ஜனாதிபதி இதுவரை தீர்வு காணமுடியாத பல பிரச்சினைகளுக்கும் அதன்மூலம் தீர்வு கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

கொலன்னாவ, மீதொட்டமுல்ல குப்பை மேடு பிரச்சினை தொடக்கம் இழந்த சர்வதேச ஒத்துழைப்புகளை மீளப்பெறுவது வரையான வெற்றிகள் தொடர்பிலும் ஜனாதிபதி இதன்போது கருத்து தெரிவித்தார். 

அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.மரிக்கார், கொலன்னாவ பிரதேச அபிவிருத்திக் குழு இணைத்தலைவர் பிரசன்ன சோலங்கஆரச்சி ஆகியோர் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08