இருபதுக்கு20 உலகக்கிண்ண தகுதிக்கான் போட்டியில் இன்று ‘பி’ பிரிவில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சிம்பாப்வே– ஸ்காட்லாந்து அணிகள் இருபதுக்கு 20 போட்டியில் முதல் முறையாகவே  இன்று மோதுகிறது. 

ஸ்காட்லாந்து அணியை வீழ்த்தி 2 ஆவது வெற்றியை பெற சிம்பாப்வே போராடும் அதேவேளை   ஸ்காட்லாந்து அணி தொடக்க ஆட்டத்தில் தோற்றதால் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது. இதிலும் தோற்றால் ஸ்காட்லாந்து அணி வெளியேற்றப்படும். 

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் தகுதி சுற்று ஆட்டங்கள் இந்தியாவில் நாக்பூர், தர்மசாலாவில் நடைபெற்று வருகிறது.