ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நண்பகல் 12.00 மணிக்கு விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெறவுள்ளது.

இந்த விசேட அமைச்சரவைக் கூட்டம் தொடர்பில் நேற்றைய தினம் ஜனாதிபதி செயலகத்தினூடாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

மேலும் ஜனாதிபதியின் இந்த விசேட அமைச்சரவைக் கூட்டத்திற்கான காரணம் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.