கொழும்பு-02, பாக் வீதிப் பகுதியில் உள்ள இரண்டு மாடிக் கட்டடமொன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் கட்டடத்தின் மேல் மாடி முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக தீயணைப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இன்று அதிகாலை 6.00 மணியளவிலேயே இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

அத்துடன் தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.