கிளிநொச்சியில் பதற்றம் ; பொதுச் சந்தை ரவுடிக்கும்பலின் கட்டுப்பாட்டில்

Published By: Digital Desk 4

12 Sep, 2018 | 09:03 PM
image

கிளிநொச்சி  பொதுச் சந்தையினை ரவுடிக்கும்பல் ஒன்று. இன்று மாலை ஆறு மணி முதல் ஆறு 45 மணி வரை தங்களது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தது 

சினிமா பாணியில் நடந்துகொண்ட குறித்த ரவுடிக்கும்பல் சந்தைக்கு வந்தவர் போனவர் பெண்கள் என அனைவரையும் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது

மகேந்திரா ரக வாகனம் ஒன்றில் வந்திறங்கிய இருபது பேர் கொண்ட இளைஞர் குழு ஒன்று   “எங்கேயடா குமார்” என்று கேட்டப்படி கையில் கத்தி, இரும்புகள், இரும்பினால் தாக்குதல்களை மேற்கொள்ளவென செய்யப்பட்ட கூரிய ஆயுதங்கள் என்பவற்றுடன் அங்கும் இங்கும் ஓடி திரிந்து அட்டகாசம் புரிந்துள்ளனர்.

சந்தையின் வியாபாரிகள், மற்றும் சந்தைக்கு வரும் பொதுமககள் என அனைவரையும் தாக்கியுள்ளனர். கை குழந்தையுடன் பொதுச் சந்தைக்கு வந்த பெண்னையும் தாக்குவதற்கு முற்பட்ட போது அவர் அலறியபடி சந்தையின் பின்பக்கமாக ஓடி தப்பிவிட்டார்.

இந்நிலையில் மேலும் சிலர் வருகை தந்த போது இரண்டு குழுக்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. இதன் பின்னர் சந்தையில் நின்றவர்கள் மீது குறித்த ரவுடிக் கும்பல் தாக்குதல்களை மேற்கொண்டது.

சம்பவத்தின் போது பொலிஸாருக்கு நேரடியாக சென்று தகவல் வழங்கிய போது சந்தைக்கு விரைந்த பொலிஸாரை கண்டவுடன் குறித்த ரவுடிக்கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர் 

.இந்நிலையில் இருவர்  மடக்கி பிடிக்கப்பட்டுள்ளார்.  பிடிக்கப்பட்ட ஒருவருக்கு தலையில் பலத்த காயம் எனத் தெரிவிக்கப்படுவதோடு. அவர் தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனையடுத்து மேதிலக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36