மட்டக்களப்பு மாட்டத்தில் தற்போது பெய்துவரும் தொடர் அடை மழை காரணமாக 18 ஆயிரம் ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பெரும்போக செய்கை சேதமடைந்துள்ளதாக மாவட்ட கமத்தொழில் திணைக்கள உதவிப்பணிப்பாளர் கே.சிவலிங்கம் தெரிவித்தார். 

இதனால் விவசாயிகள் பெரும் நட்டத்தை எதிர் கொண்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர். விவசாய வயல் நிலங்கள் மழை வெள்ளத்தின் உடைப்பெடுத்து அள்ளுண்டு போய்யுள்ளன. இந்நிலையில் விவசாயிகளில் சிலர், ஏற்கனவே நெல் விதைத்த வயலில் மீண்டும் நெல்விதைப்பு நடவடிக்கையில் ஈடுப்பட்டு வருகின்றதையும் அதானிக்க முடிகின்றது.


கிரான், வெல்லாவெளி, கொக்கடிச்சோலை பிரதேச செயலகப்பிரிவுகளில் செய்கை பண்ணப்பட்ட பெருமளவிலான நெற்செய்கை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
பல இடங்களில் வயல் நிலங்களில் வெள்ளநீர் தொடர்ந்தும் தேங்கி நிற்கிறது. இதனால் முளைவிட்ட நெற் பயிர்கள் அழுகி சேதமடைந்துள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.