(எம்.எப்.எம்.பஸீர்)

ஐந்து  மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரை வெள்ளை வேனில் கடத்திச் சென்று, காணாமல் ஆக்கிய சம்பவம் தொடர்பில்  பிரதான சந்தேக நபரான நேவி சம்பத் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி மறைந்திருக்க உதவியமை குறித்த குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட முன்னாள் கடற்படை தளபதியும் தற்போதைய முப்படைகளின் அலுவலக பிரதானியுமான அத்மிரால் ரவீந்திர விஜேகுணரத்ன, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பூரண ஒத்துழைப்புடனேயே வெளிநாடு சென்றுள்ளதாக சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன இன்று நீதிமன்றில் தெரிவித்தார்.

5 மாணவர் உள்ளிட்ட 11 பேரின் கடத்தல் தொடர்பிலான வழக்கு நேற்று கோட்டை நீதிவான் லங்கா ஜயரத்ன முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன இதனை  நீதிவானிடம் தெரிவித்தார்.