ஒரு சிறிய இடைவெளிக்கு பின் மீண்டும் நடிகராக களமிறங்கியுள்ள நடன இயக்குநர் பிரபுதேவா நடித்திருக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் சிங்கிள் டெரெக் செப்டம்பர் 14 ஆம் திகதியன்று வெளியாகவுள்ளது.

நடன இயக்குநராக இருந்து, நடிகராகவும், இயக்குநராகவும் உயர்ந்தவர் பிரபுதேவா. இவர் நடிப்பில் களவாடிய பொழுதுகள், குலேபகாவலி, மெர்க்குரி, லட்சுமி என வரிசையாக படங்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றன.

இந்நிலையில் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் பிரபுதேவா, பிரபு, நிக்கி கல்ராணி, அடா சர்மா என பலர் நடித்திருக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தின் தொலைகாட்சி உரிமை மற்றும் டிஜிட்டல் உரிமையை சன் ரிவி பெற்றிருக்கிறது. 

இதைத் தொடர்ந்து இப்படத்தின் சிங்கிள் டெரெக் செப்டம்பர் 14 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

பிரபுதேவா தற்போது பொன் மாணிக்கவேல், தேள், தேவி 2 ஆகிய படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறமை குறிப்பிடத்தக்கது.