(நா.தினுஷா, எம்.மனோசித்ரா) 

கூட்டு ஒப்பந்தம் என சொல்லி முதலாளிமார் சம்மேளனம்,பெருந்தோட்ட கம்பனிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் மலையக மக்களை ஏமாற்றி வருகின்றன. இனிமேலும் நம்பி வீண்போக முடியாது. 

ஆகவே எதிர்வரும் 23 ஆம் திகதி மலையகம் முழுவதும் ஸ்தம்பிக்கும் எனவும் அன்றயதினம் மலையக பிரதேசங்கள் முழுவதும் அடையாள  போராட்டத்தை மேற்க்கொள்ளவுள்ளதாகவும் பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியம் அறிவித்துள்ளது. 

பெருந்தோட்ட மக்களின் பிரச்சினைகள் தொடர்பான கூட்டு ஒப்பந்தம தொடர்பான கலந்துரையாடல் இணக்கப்பாடின்றி முடிவடைந்தென்பதே கூட்டு ஒப்பந்தத்தில் ஈடுப்படும் தொழிற்சங்கங்களின் பதிலாக காணப்படுகின்றது. ஆனால் தொழிற்சங்கங்களின் இந்த பதிலை ஒருப்போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

அதேபோன்று ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் தொடர் அழுத்தங்களை சந்திக்க நேரிடும் என்றும் 23 மூன்றாம் திகதி ஆர்பாட்டத்துக்கு அனைத்து சங்கங்கள் மற்றும் மக்களையும் கலந்துகொள்ளுமாறும் மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பயா  அறிவித்தார்.