மட்டக்களப்பில் நீதிமன்ற பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்ட நபர் தலைமறைவாகியிருந்த நிலையில் நேற்று கசிப்பு தயாரிப்பில் ஈடுபட்டிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு – கருவப்பங்கேணி அம்ரோஸ் வீதியில் அமைந்துள்ள தனது வீட்டில் சந்தேக நபர் பதுங்கியிருப்பதாக பொலிஸ் விஷேட பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து மட்டக்களப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் ஆலோசனைக்கு ஏற்ப ஐ.பி ஹெட்டியாராச்சி தலைமையிலான பொலிஸ் புலனாய்வு குழுவினர் நேற்றிரவு 10 மணியளவில் மேற்கொண்ட  சுற்றிவளைப்பில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரை கைது செய்ததோடு 7500 மில்லி லீட்டர் கசிப்பு 37500 மில்லி லீட்டர் கோடா மற்றும் கசிப்பு தயாரிப்பிற்காக பயன்படுத்திய உபகரணங்களையும் மீட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை மட்டக்களப்பு நீதவான் நீதி மன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.