இலங்கையின் தற்போதைய இராணுவதளபதி மகேஸ்சேனநாயக்க உகன்டாவின் சர்வாதிகாரி இடி அமீன் போல காணப்படுகின்றார் என முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளதை தொடர்ந்து இருவருக்கும் இடையில் சொற்போர் மூண்டுள்ளது.

இராணுவ தளபதியின் தலைமொட்டையாக காணப்படுகின்றது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

இராணுவதளபதி குழப்பமான மனதுடன் செயற்படுகின்றார் கௌரவாமான அதிகாரி என்ற வகையில் அவரிற்கு தனது தலைமுடியை எவ்வாறு பேணவேண்டும் என்பது தெரிந்திருக்கவேண்டும் என சரத்பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

அவர் மொட்டையாக இடி அமீன் போன்று தோற்றமளிக்கின்றார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

நான் இராணுவதளபதியாகயிருந்தவேளை தற்போதைய இராணுவதளபதி பிரிகேடியராகவே பணியாற்றினார்,அவருக்கு என்னை விட அதிகம் தெரியும் என  அவர் நினைத்தால் அது அவரின் முட்டாள்தனம் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மகேஸ்சேனநாயக்காவிற்கு திறமையுள்ளது என்பதால் அவர் இராணுவதளபதி பதவிக்கு நியமிக்கப்படவில்லை ஏனையவர்களின் தவறுகள் காரணமாகவே அவர் நியமிக்கப்பட்டார் எனவும் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

ஓய்வுபெற்ற இராணுவஅதிகாரிகளின் விமர்சனங்களை நான் பொருட்படுத்தப்போவதில்லை என மகேஸ் சேனநாயக்க சமீபத்தில் தெரிவித்திருந்ததன் தொடர்ச்சியாகவே சரத்பொன்சேகா இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.