சிரியாவின் இட்லிப்பில் இடம்பெற்ற விமானதாக்குதலை தான் காயமடைந்த நிலையிலும் தொடர்ந்து படம்பிடித்துக்கொண்டிருந்த பத்திரிகையாளரால் பதிவு செய்யப்பட்ட வீடியோ வெளியாகியுள்ளது

அனாஸ் அல் டயாப் என்ற நபரே இவ்வாறு காயமடைந்த நிலையிலும் குண்டுவீச்சினை வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

வெள்ளை தலைக்கவசம் மீட்பு குழுவுடன் இணைந்து பணியாற்றும் 22 வயதுடைய பத்திரிகையாளராக அனாஸ் அல் டயாப் இட்லிப்பில் தொழில்சாலையொன்றின் மீது இடம்பெற்ற குண்டுவீச்சினை வீடியோவில் பதிவு செய்துகொண்டிருந்துள்ளார்.

அவ்வேளை அவரும் குண்டு தாக்குதலிற்கு இலக்காகியுள்ளார்.

எனினும் காயமடைந்த நிலையிலும் அவர்  தனது புகைப்படக்கருவியை இயக்கிபடி குண்டு வீச்சினை பதிவு செய்துள்ளார்.

சிரியாவில் குண்டுவீச்சு இடம்பெற்ற பகுதிகளில்  மீட்பு பணியில் ஈடுபடும் வெள்ளை தலைக்கவசம் மீட்பு குழுவினர் குறித்த வீடியோவை சிஎன்என்னிற்கு வழங்கியுள்ளனர்.

டயாப் காலில் கடுமையாக காயமடைந்த நிலையில் கதறுவதை வீடியோ காண்பித்துள்ளது.

தயவு செய்து என்னை காப்பாற்றுங்கள் என அவர் சக மீட்பு பணியாளர்களை பார்த்து அலறுகின்றார்.

என்னால் நடக்கமுடியவில்லை எனவும் அவர் அலறுகின்றார்.

ஏனைய மீட்பு பணியாளர்கள் அவரை கொண்டு செல்ல முயல்கின்றனர், உரிய ஸ்டிரெச்சர் இல்லாமையினால் அவரை மீட்பு பணியாளர்கள் இடிபாடுகளிற்கு மத்தியில் இழுத்துசெல்வதையும் அவரது காலில் இருந்து இரத்தம் பெருக்கெடுப்பதையும் வீடியோ காண்பித்துள்ளது.

அதன் பின்னர் மீண்டும் ஒரு விமானம் வருவதையும் குண்டுவீச்சு இடம்பெறுவதையும் வீடியோ காண்பித்துள்ளது.

எனினும் டயாப் உயிர்பிழைத்துள்ளார் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சிரிய அரசாங்கமும் அதன் சகாக்களும்  அப்பாவி பொதுமக்களை இலக்குவைக்கின்றனர் தங்களால் முடிந்தளவிற்கு மக்களை கொலை செய்ய முயல்கின்றனர் என அவர் மருத்துவமனையிலிருந்தபடி கருத்து வெளியிட்டுள்ளார்.

எனவும் தெரிவித்துள்ளார்.

சிஎன்என் வெளியிட்டுள்ள வீடியோ இட்லிப்பிராந்தியத்தில் காணப்படும் அவலநிலையை சித்தரித்துள்ளது.

வீடுகள் மீது எறிகணை வீச்சு இடம்பெறும்போது மக்கள் குழந்தைகளுடன் தப்பியோடுவதையும் மக்களின் துயரங்கiயும் அந்த வீடியோ காண்பித்துள்ளது.