தமிழர்களுக்கு எதிரான வன்முறைக்கு காரணம் பொலிஸாரே ; சிறீதரன்

Published By: Digital Desk 4

13 Sep, 2018 | 12:30 PM
image

இலங்கை வரலாற்றில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைக் கலாசாரம் கட்டவிழ்த்து விடப்பட்டதன் பின்னணியில் எல்லாம் பொலிஸாரே இருந்து வருகிறனர். என பாராளுமன்ற உறுப்பினர் .சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்

அதன் ஒரு அங்கமாக கனகராயன்குளத்தில் விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக தனது காணியை குத்தகைக்கு கொடுத்திருந்த முன்னாள் போராளியான குடும்பஸ்தரும் அவரது மனைவி மற்றும் மகளும் பொலிஸ் பொறுப்பதிகாரியால் தாக்கப்பட்டுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

தனக்குச் சொந்தமான காணியின் ஒரு பகுதியை விருந்தினர் விடுதி நடாத்துவதற்காக குத்தகைக்கு கொடுத்ததும், குத்தகைக்காலம் முடிவடைந்த பின்னரும் காணியை மீள ஒப்படைக்காத விடுதி உரிமையாளர் மீது வழக்குத் தொடர்ந்ததும் சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்ட செயலே ஆகும். 

ஆனால் காணி உரிமையாளருக்கும், விடுதி உரிமையாளருக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாட்டை தீர்த்துவைக்கவேண்டிய பொலிஸாரே அதற்கு வன்முறைவடிவம் கொடுத்து காணியின் உரிமையாளரை கடுமையாக தாக்கியதோடு அதனை தடுக்கமுனைந்த அவரது மனைவியையும், மகளையும் தாக்கியுள்ளமையும், காயமடைந்த குடும்பஸ்தர் வைத்தியசாலையில் விலங்கிடப்பட்ட நிலையிலேயே சிகிச்சை பெற அனுமதிக்கப்பட்டிருப்பதும் சட்டதிட்டங்களுக்கும், மனிதாபிமானத்திற்கும் அப்பாற்பட்ட விடயமாகும்.

புனர்வாழ்வுபெற்ற ஒரு முன்னாள் போராளிக்கு நேர்ந்துள்ள இந்நிலைமையானது மிகுந்த மன வேதனையளிக்கிறது. மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் தம்மையே அர்ப்பணித்து வாழ்ந்த இவர்கள் யுத்தம் முடிவுற்றதன் பின்னர் புனர்வாழ்வு பெற்று தமது குடும்பங்களுடன் இணைந்து வாழ ஆரம்பித்திருக்கும் இன்றய சூழலில் பொலிஸார் இவ்வாறான சம்பவங்களை அரங்கேற்றுவது பொருத்தமானதல்ல. 

இச்சம்பவத்தை திட்டமிட்ட செயலாகவே கருதமுடிகிறது. பொலிஸாரின் இந்த அடாவடித்தனத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதோடு பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக நீதி வழங்கப்பட வேண்டும்.

அதேவேளை தமிழ் பேசும் சகோதர்கள் என்ற அடிப்படையில் தமிழர்களின் காணிகளை வியாபார நடவடிக்கைகளுக்காக குத்தகைக்கு எடுக்கும் முஸ்லிம் சகோதரர்கள் நியாயமற்ற முறையில் பொலிஸாரை இடைத்தரகர்களாக வைத்து நீதிக்குப்புறம்பான செயற்பாடுகளை முன்னெடுப்பதால் தமிழ் முஸ்லிம் மக்களிடையேயான உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதை உணர்ந்து செயற்பட வேண்டியது அவசியமானதாகும். 

குறித்த சம்பவத்தில் காயமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலைக்கு நேரில் சென்று பார்வையிட்டதன் பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீசிவஞானம் சிறீதரன் மேற்கண்டவாறு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08