(இரோஷா வேலு) 

கொழும்பில் இருவேறு பகுதியில் வைத்து 13 கிராம் 750 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப்பொருளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

தொட்டகொட ஆராம வீதி குடியிருப்பு பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் 11 கிராம் 300 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயினுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

 தெமட்டகொடையைச் சேர்ந்த 46 வயதுடைய கொலின் மீசோ என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை இன்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர். 

அதேபோல், மோதரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொட்டலங்க வீதி பகுதியில் வைத்து 2 கிராம் 450 கிராம் நிறையுடைய ஹெரோயின் பக்கெட்டுடன் ஒருவர் மோதரை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டார். 

 பெர்குசன் வீதியைச் சேர்ந்த 36 வயதுடைய ரஞ்சித் குமார என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவரை கைதுசெய்துள்ள மோதரை பொலிஸார் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.