கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் கடத்தல் சம்பவம் தொடர்பில் நால்வர் கொடிகாமம் பொலிஸாரினால் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொடிகாமம் பொலிஸாருக்குச் சொந்தமான வாகனம் ஒன்றை நேற்று இரவு இனந்தெரியாத குழு ஒன்று கடத்திச் சென்றுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அந்த வாகனத்துக்குள் பொலிஸாரின் ஆயுதங்கள் இருந்தன என்றும் மணல் கடத்தலைப் பிடிக்கச் சென்றிருந்த வேளை, பொலிஸாரைத் தாக்கிவிட்டு வாகனம் கடத்திச் செல்லப்பட்டதாக பொலிஸார் கூறுகின்றனர்.

இந்நிலையில் குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பில் இன்று காலை கொடிகாமம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.