ரஷ்யாவின் டென்னிஸ் நட்சத்திரமான மரியா ஷரபோவா ஆஸி. ஓபனில் மெல்­டோ­னியம் எனும் ஊக்க மருந்தை பயன்­ப­டுத்­தி­யது சோத­னையில் நிரூ­ப­ண­மாகி உள்­ளது. இதை தொடர்ந்து ஷர­போவா விளை­யாட இடைக்­கால தடை விதிக்­கப்­பட்­டது.

இந்த நிலையில் ஊக்க மருந்து பயன்­ப­டுத்­தி­யதால் டென்­னிஸில் ஷர­போவா பெற்ற அனைத்து வகை பட்­டங்­களை பறிக்க வேண்டும் என்றும் முன்னாள் வீராங்­கனை ஜெனீபர் கேப்­ரி­யாட்டி வலி­யு­றுத்தி உள்ளார். ஷர­போவா ஊக்க மருந்தில் சிக்­கி­யது மிகுந்த ஏமாற்­றத்தை அளிக்­கி­றது.

டென்னிஸ் போட்­டியில் அவர் வெற்றி பெற்ற அனைத்து பட்­டங்­க­ளையும் பறிக்க வேண்டும் என்­பது தான் எனது

கருத்­தாகும். அப்­போது தான் மற்­ற­வர்கள் சரி­யாக விளை­யா­டு­வார்கள் என்று கேப்ரியாட்டி கூறியுள்ளார்.