யாழ்ப்பாணத்தில் இருவர் கஞ்சா போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.யாழ்.வடமராட்சி அல்வாய் பகுதியை சேர்ந்த இருவரே இன்று அதிகாலை நெல்லியடி பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நெல்லியடி பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலையே இருவரும் இன்று அதிகாலை கைதுசெய்யபட்டதுடன் , கைதுசெய்யபட்டவர்களிடம் இருந்து ஒரு கிலோ 300 கிராம் கஞ்சா போதைப் பொருளை பொலிசார் மீட்டுள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.