11 இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள நேவி சம்பத்தின் விளக்கமறியல் காலம் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.

2008 தொடக்கம் 2009 ஆம் ஆண்டு காலப் பகுதியில் கொட்டஞ்சேனை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் 6 சர்வதேச பாடசாலை மாணவர்களும் ஐந்து பல்கலைக்கழக மாணவர்களும் உட்பட 11 பேர் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பாகவே அவர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இன்று அவர் கொழும்பு, கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜபர்டுத்தப்பட்ட போதே நீதிவான் அவரை எதிர்வரும் 26 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.