வடமாகாணத்தில் இந்திய குடும்பங்கள் குடியமர்த்தப்பட்டதான குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானது - அரசாங்க தகவல் திணைக்களம் 

Published By: Daya

12 Sep, 2018 | 09:59 AM
image

வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை வட மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு உண்மைக்குப்புறம்பானதென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக  அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

வட மாகாண சபையின் அரசியல் அதிகாரத்திலுள்ளவர்கள் 250 இந்திய குடும்பங்களை அந்த மாகாணத்தின் கிராமமான நெடுங்கேணியில் குடியமர்த்தியுள்ளதாக பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளதுடன் அது தொடர்பான ஊடக அறிக்கைகளுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் தனது கவனத்தை செலுத்தியுள்ளது.   

குறித்த வெளிநாட்டு பிரஜைகள் அல்லது குடும்பங்கள் நாட்டின் எந்த பாகத்திலும் குடியமர்த்தப்படாததன் காரணத்தினால், அரசாங்க தகவல் திணைக்களம் இந்த குற்றச்சாட்டுக்கள் ஆதாரமற்றவை என குறிப்பிட விரும்புகின்றது. 

2009 ஆம் ஆண்டில் யுத்தம் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதன் பின்னர், இந்தியாவிற்கு யுத்தத்தின்போது அகதிகளாக சென்ற 10,675 இலங்கைப் பிரஜைகள் இன்று வரை தமது சொந்த விருப்பத்தின் பேரில் இலங்கைக்கு நாடு திரும்பியுள்ளனர். இந்த அனைத்து நபர்களும் இலங்கைப் பிரஜைகள் ஆவதுடன், அவர்களது குடியுரிமை நிலை முறையாக நிரூபிக்கப்பட்டுள்ளது. 

 அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சட்டத்தரணி  சுதர்ஷன குணவர்தன கையெப்பமிட்டு அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38
news-image

வரலாற்றில் இன்று : 1956 ஏப்ரல்...

2024-04-18 17:01:15
news-image

கோட்டா என்னை ஏமாற்றினார் - மல்கம்...

2024-04-18 16:58:51
news-image

திரியாய் தமிழ் மகாவித்தியாலயத்தின் குடிநீர்ப் பிரச்சினைக்கு...

2024-04-18 16:51:36
news-image

கட்டுத்துப்பாக்கி வெடித்ததில் குடும்பஸ்தர் காயம் -...

2024-04-18 16:18:49
news-image

"வசத் சிரிய - 2024" புத்தாண்டு...

2024-04-18 16:25:36