வவுனியாவில் பாடசாலை மாணவர்களினால் போதைப்பொருள் பாவனைக்கெதிராக  விழிப்புணர்வு பேரணி நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகம் மற்றும் கல்வி அமைச்சு என்பன இணைந்து நடாத்தும் "பேண்தகு பாடசாலை" நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 'புகைத்தல் மற்றும் போதைப்பொருள் பாவனைக்கெதிரான விழிப்புணர்வு பேரணியானது வவுனியா, சின்னச்சிப்பிக்குளம் தாருல் உலூம் முஸ்லிம் வித்தியாலயத்தின் அதிபர் ஏ.சீ. ஜுனைதீன் தலைமையில்  நேற்று இடம்பெற்றது.

இவ் பேரணியில் கலந்துகொண்டோர் "போதை போதை அது சாவின் பாதை, காசைக் கொடுத்து நோயை வாங்காதே, புகைத்தல் புற்று நோயை உண்டாக்கும், நீ குடித்த மது உன்னைக் கொல்லும் அது" போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்திச் சென்றனர்.

இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் ரியல்.எம் இம்தியாஸ், எஸ்.டி.எஸ் செயலாளர் எம். ஜமீன், கிராம சேவையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஏ.பி. நிவாஸ், பொது சுகாதார பரிசோதகர், பொலிஸார் , பெற்றோர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.