வவுனியா - வைரவப்புளியங்குளத்தில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் சுற்றுவளைப்பின் போது 20க்கு மேற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

வவுனியா வைரவப்புளியங்குளம் யங்ஸ்டார் மைதானத்திற்கு அருகே பாடசாலை இளைஞர்கள் மற்றும் வீதியில்  இளைஞர்கள் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது , தலைக்கவசம் அணிவதில்லை , ஓர் மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது , அதிவேகமாக செல்வது தொடர்பாக பொதுமக்கள்பல முறைப்பாடுகள் பொதுமக்களினால் பொலிஸாருக்கு  முன்வைக்கப்பட்டது.

இதனை கருத்தில் கொண்ட வவுனியா மாவட்ட போக்குவரத்து பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி தலைமையிலான 8க்கு மேற்பட்ட போக்குவரத்து பொலிஸார் வைரவப்புளியங்குளம் வீதியில் நேற்று  திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இதன் போது 20க்கு மேற்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா போக்குவரத்து பொலிஸாரின் நடவடிக்கைக்கு சமூக அமைப்புக்கள் , அப் பகுதி மக்கள் பாராட்டுக்களை தெரிவித்ததுடன் இவ்வாறான நடவடிக்கையினை தொடர்ந்து மேற்கொள்ளுமாறும் தெரிவித்தனர்.