நடிகை ஜோதிகா நடிப்பில் உருவாகவிருக்கும் புதிய படம் ஒக்டோபரில் தொடங்கும் என அந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ் ஆர் பிரபு தெரிவித்திருக்கிறார்.

காற்றின் மொழி, செக்கச் சிவந்த வானம் ஆகிய படங்களைத் தொடர்ந்து நடிகை ஜோதிகா அறிமுக இயக்குநர் ராஜ் என்பவரின் இயக்கத்தில் தயாராகவிருக்கும் புதிய படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார்.

இது குறித்து படக்குழுவினர் தெரிவிக்கும் போது,

இரண்டு மாதங்களுக்கு முன் அறிமுக இயக்குநரான ராஜ் ஜோதிகாவிடம் ஒரு கதையை கூறியுள்ளார்.

அந்த கதை பிடித்துபோனதால் நடிக்க சம்மதித்தார். இதனை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான எஸ் ஆர் பிரபு தயாரிக்கிறார்.

படத்தின் படபிடிப்பு ஒக்டோபரில் தொடங்குகிறது. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படபிடிப்பு நடைபெறும் என்றும், இது ஒரு சோசியல் டிராமா ஜேனர் படம் என்றும் தெரிவிக்கிறார்கள்.

இதனிடையே திருமணத்திற்கு பிறகு 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார் என வரிசையாக மூன்று வெற்றிப் படங்களில் நடித்த ஜோதிகா, தற்போது மணிரத்னம் இயக்கத்தில் விரைவில் வெளியாகவிருக்கும் செக்கச் சிவந்த வானம் படத்தில் அரவிந்தசாமிக்கு ஜோடியாகவும், ராதாமோகன் இயக்கத்தில் காற்றின் மொழி என்ற படத்திலும் நடித்து முடித்திருக்கிறமை குறிப்பிடத்தக்கது.