(எம்.சி.நஜிமுதீன்)

அரசாங்கம் ஏற்படுத்தியுள்ள எரிபொருள் சூத்திரத்தினால் மக்களுக்கு பலன் கிடைக்கப்பபோவதில்லை. ஏனெனில் உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை வீழ்ச்சியடைந்திருந்த காலத்தில் சூத்திரம் அறிமுகப்படுத்தப்படவில்லை. 

அப்போது அதனை அறிமுகப்படுத்தியிருப்பின் மக்கள் பலனடைந்திருப்பர். எனினும் உலக வர்த்தக சந்தையில் எரிபொருள் விலை கிரமமாக அதிகரிக்க ஆரம்பித்துள்ள காலத்தில் சூத்திரம் அறிமுகப்டுத்தப்பட்டுள்ளதால் மக்கள் விலை ஏற்றத்தை மாத்திரம் எதிர்கொள்ளவுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம்வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.