வட­ப­குதி மக்­களின் வாழ்­வா­தா­ரத்தைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கும் இரா­ணுவம் வச­முள்ள அம் மக்­களின் தங்கநகை­களை மீளக் கைய­ளிப்­ப­தற்கும் அர­சாங்கம் நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நேற்று சபையில் உறு­தி­ய­ளித்தார்.

மக்­களின் தங்க நகைகள் தொடர்­பாக பாது­காப்பு இராஜாங்க அமைச்சர் மத்­திய வங்கி ஆளுநர் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. க்கள் சந்­தித்து பேச்­சுக்­களை நடத்­து­வ­தற்கு இரண்டு வாரங்­களில் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படும் என்றும் பிர­தமர் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை பிரத­ம­ரிடம் நேர­டி­யாகக் கேள்வி கேட்கும்

நேரத்தின் போது ஜே.வி.பி. எம்.பி. டாக்டர் நளிந்த ஜய­திஸ்ஸ கேட்ட கேள்­விக்கே பிர­தமர் இப்­ப­திலை வழங்­கினார்.

எம்.பி.யின் கேள்வி

விடு­தலைப் புலி­களின் வங்­கி­களில் வட பகுதி மக்­களால் அடகு வைக்­கப்­பட்ட தங்க நகை­களை இரா­ணுவம் கைப்­பற்­றி­யது. அத்­தொகை எவ்­வ­ளவு? தேர்தல் காலங்­களில் சில­ருக்கு தங்கம் மீள கைய­ளிக்­கப்­பட்­டதே என்றும் அவர் கேள்­வி­யெ­ழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, விடு­தலை புலி­க­ளி­ட­மி­ருந்து இரா­ணு­வத்­தி­னரால் 150 கிலோ கிராம் தங்கம் கைப்­பற்­றப்­பட்­டுள்­ளது. இத்­தொ­கையில் கட்டம் கட்­ட­மாக மத்­திய வங்­கிக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது.

இத் தங்­கத்தின் பெறு­மதி 131 மில்­லியன் ரூபா­வுக்கும் அதி­க­மா­ன­தாகும். அத்­தோடு இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட தங்கம் மற்றும் பொது மக்­க­ளுக்கு மீளக் கைய­ளிக்­கப்­பட்ட தங்கம் தொடர்பில் முரண்­பா­டான தக­வல்­களே உள்­ளன. இது தொடர்பில் அனைத்து தக­வல்­க­ளையும் ஆராய்ந்து விரைவில் இச் சபைக்கு அறி­விக்­கின்றேன். தற்­போது தங்­கத்­திற்கு சொந்­த­மா­ன­வர்கள் பலரை அடை­யாளம் கண்­டுள்­ளனர்.

இது தொடர்பில் விப­ரங்­களை தெரிந்த முன்னாள் இரா­ணுவத் தள­பதி சரத் பொன்­சேகா மற்றும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி. க்களி­ட­மி­ருந்து தக­வல்­களை பெற்றுக் கொள்ள முடியும் என பிர­தமர் தெரி­வித்தார்.

இதன்­போது குறுக்­கிட்ட ஜே.வி.பி. எம்.பி. அநுர குமார திஸா­நா­யக்க,

பிர­தமர் அனைத்து கேள்­வி­க­ளுக்கும் குழு அமைத்து விசா­ரணை என்றும் நிலை­யியற் கட்­ட­ளை­க­ளுக்கு அமைய நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்றும் கூறு­கின்றார்.

மக்­களின் தங்க நகை­களை மீளக் கைய­ளிக்க வேண்­டி­யது அரசின் கட­மை­யாகும். எனவே இரா­ணு­வத்­திடம் தற்­போ­துள்ள தங்க நகை­களை மக்­க­ளிடம் கைய­ளிப்­ப­தற்கு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள வேண்டும் என்றார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர்;

கடந்த காலத்தில் இடம்­பெற்ற விட­யங்கள் அனைத்­தையும் தேடிப் பார்க்க போனால் நிகழ்­கால மற்றும் எதிர்­கால நட­வ­டிக்­கைகள் அனைத்தும் ஸ்தம்­பி­த­ம­டைந்­து­விடும். அத்­தோடு குழுக்கள் அமைத்து தேடிப் பார்ப்­ப­தற்கு காலம் எடுக்கும். எனவே தான் எம்­மி­ட­முள்ள தக­வல்­களை வழங்­கு­கின்றோம். அதற்­க­மைய பாரா­ளு­மன்றம் உண்­மை­களை கண்­ட­றிய வேண்டும். அதனை கண்­கா­ணிப்பு குழுக்­களும் நிலையிற் குழுக்­களும் மேற்­கொள்ள முடியும் என்றார்.

இதன்­போது மீண்டும் குறுக்­கிட்ட அனுர திஸா­நா­யக்க எம்.பி.

150 கிலோ கிராம் தங்கம் கைப்­பற்­றப்­பட்­ட­தா­கவும் 30 கிலோ மீளக் கைய­ளிக்­கப்­பட்­ட­தா­கவும் 80 கிலோ இரா­ணு­வத்­தி­ன­ரிடம் இருப்பில் உள்­ள­தா­கவும் பிர­தமர் தெரி­வித்தார்.

அப்­ப­டி­யானால் 40 கிலோ கிராம் தங்கம் குறை­கி­றது. இதற்கு என்ன நடந்­தது என்­பதை தேடிப் பார்க்க வேண்­டி­யது அரசின் கடப்­பா­டாகும் என்றார்.

இதற்கு பதி­ல­ளித்த பிர­தமர் இரா­ணு­வத்­தினர் எனக்கு வழங்­கிய அறிக்கை பிர­கா­ர­மான விப­ரங்­க­ளையே சபையில் அறி­வித்தேன். எனவே உங்கள் கேள்­விக்கு முழு­மை­யான தக­வல்­களை பெற்றுக் கொண்டு பதி­ல­ளிக்­கின்­றேன்­என்று கூறினார்.

அநுர திஸா­நா­யக்க எம்.பி. மேலும்­தெ­ரி­விக்­கையில்

வட பகுதி மக்­களின் தங்கம் விடு­தலைப் புலி­களின் வங்­கி­களில் அடகு வைத்து அதற்­கான ரசீ­து­க­ளையும் பெற்றுக் கொண்­டுள்­ளனர்.

அந்த ரசீ­துகள் மக்­க­ளிடம் உள்­ளன அது மட்­டு­மல்­லாது இரா­ணு­வத்­தி­னரால் கைப்­பற்­றப்­பட்ட நகைகள் பொதி செய்­யப்­பட்ட பொதி­களில் புலி­களின் ரசீ­துகள் தொடர்­பான “டக்” இணைக்­கப்­பட்­டி­ருந்­தது.

எனவே உரி­மை­யா­ளர்கள் யாரென்­பதை அடை­யாளம் காண முடியும் என்றார். இதன்­போது சபை­யி­லி­ருந்த தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எம்.பி.யான ஸ்ரீதரன்;

விடு­தலை புலி­களின் வங்­கி­களில் அடகு வைக்­கப்­பட்ட தங்க நகைகள் தொடர்­பான ரசீ­துகள் மக்­க­ளிடம் உள்­ளன. அத்­தோடு நானும் அவ் வங்­கியில் தங்கம் அடகு வைத்­துள்ளேன் என்­னி­டமும் ரசீது உள்­ளது என்று தெரி­வித்­த­தோடு முல்­லைத்­தீவு, கிளி­நொச்சி மாவட்­டங்­களில் பெரும்­பா­லான வர்த்­த­கர்­களின் வாக­னங்கள் பல இலட்­சங்கள் பெறு­ம­தி­யான சொத்­துக்கள் சேத­மா­கி­யுள்­ளன. இவர்­க­ளுக்கும் நியா­யத்­தினை பெற்றுக் கொடுக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றார்.

இதற்கு பதிலளித்த பிரதமர்;

தங்க நகைகள் மக்களுக்கு மீளக் கையளிப்பது தொடர்பில் இரண்டு வாரங்களுக்குள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்இ மத்திய வங்கி ஆளுநர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யினர் சந்தித்து பேச்சுக்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்படும். அத்தோடு வடமாகாண மக்களின் வாழ்வதாரத்தை மற்றும் வாழ்க்கை தரத்தை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளையும் அரசு முன்னெடுக்கும் என்றார்.