(நா.தினுஷா) 

சமுத்திர பல்கலைகழகம் அரச பல்கலைகழகமாக இருந்தப்போதிலும் உயர்கல்விக்கான வாய்ப்புக்கள் எதுவும் எமக்கில்லை.

 

சமுத்திர பல்கலைகழக சட்டத்தில் உள்ள சலுகைகள் அனைத்தையும் எங்களுக்கு பெற்றுக்கொடுப்பதுடன் முழுமையான கல்வி வாய்ப்புக்களை பெற்றுக்கொடுக்குமாறு கோரி சமுத்திர பல்கலைகழகத்தின் பொறியியல் மற்றும் முகாமைத்துவ பீடத்துக்கான மாணவர்கள் இன்று கொழும்பில் அமைதி போராட்டத்தினை முன்னெடுத்திருந்தது.  

பத்தரமுல்லை செத்சிறிபாய கட்டத்தொகுதியின் வளாகத்தில் இந்த அமைதி போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன்  தமது பிரச்சினைகள் தொடர்பில் உயர்கல்வி அமைச்சுக்கு அறிவித்துள்ளதாகவும், ஆனால் பிரச்சினை தொடர்பில் கலந்துரையாடல்களை மேற்கொள்ள நடவடிக்கைகள் எதுவும் எடுக்கவில்லையெனவும் மாணவர்கள் குற்றம்சுமத்தினர்.