(இராஜதுரை ஹஷான்)

இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, நாளை இந்திய பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க வாய்ப்பு உள்ளதாக விஜயத்தில் பங்குபற்றியுள்ள  மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்தார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இந்தியாவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் தொடர்புகொண்டு வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இந்தியாவுடன் வலுவான   நல்லுறவுகளை மீண்டும்   கட்டியெழுப்பும் நோக்கில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குழு டெல்லியை வந்தடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.  

 இலங்கை அரசாங்கத்தின் பொருளாதார கொள்கைகள்   மற்றும் மாகாண சபை தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டு வருகின்றமை, 2020ம் ஆண்டில் இடம்பெறவுள்ள  ஜனாதிபதி தேர்தல் உள்ளிட்ட விடயங்கள் குறித்தும் இதன் போது பேசப்படலாம் எனவும் குறிப்பிட்டார்.