(எம்.சி.நஜிமுதீன்)

அரச வங்கிகளை பலவீனப்படுத்தி ஈற்றில் அவ் வங்கிகளை விற்பனை செய்வதற்கே அரசாங்கம் உத்தேசித்துள்ளது. அதற்காகவே “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிசிரஜயகொடி குற்றம்சாட்டியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சி ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று கொழும்பு ஸ்ரீவஜிராஷர்ம பௌத்த நிலையத்தில் நடைபெற்றது. 

அதில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

“என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தை ஆரம்பித்து அதனூடாக கடன் பெறுமாறு ஊடகங்களில் விளம்பரம் செய்கின்றனர். எனினும் நாட்டிலுள்ள சிறு தொழிலாளர்கள் தாம் பெற்ற கடனை செலுத்த முடியாது நெருக்கடி நிலையில் உள்ளனர். அவ்வாறெனின் அந்த கடனை இரத்துசெய்யலாம்தானே. எனவே  “என்டபிரைஸஸ் ஸ்ரீலங்கா” திட்டத்தினூடாக தமது ஆதரவாளர்களுக்கு கடன் வழங்குவதேற்கே அரசாங்கம் குறித்த திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

மேலும் அத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி அரச வங்கிகளை பலவீனப்படுத்தி ஈற்றில் அவ் வங்கிகளை விற்பனை செய்வதற்கே அரசாங்கம் உத்தேசித்துள்ளது என்றார்.