கிளிநொச்சி மாவட்டத்திற்கு  தீயணைப்பு பிரிவு உருவாக்கம்

Published By: Digital Desk 4

11 Sep, 2018 | 05:54 PM
image

மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் 97 மில்லியன் நிதி ஒதுக்கீட்டில் கிளிநொச்சிக்கான தீயணைப்பு பிரிவு இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இன்று( மாலை மூன்று  மணியளவில் கிளிநொச்சி கரடிபோக்குச் சந்திக்கருக்கில் அமைக்கப்பட்ட   மாவட்ட தீயணைப்பு பிரிவின் அலுவலகமும் தீயணைப்புக்குரிய வாகனங்கள் உள்ளிட்டவை உத்தியோகபூர்வமாக கரைச்சி பிரதேச  சபையிடம் கையளிக்கப்பட்டது.

கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் கிளிநொச்சி பொதுச் சந்தையில் ஏற்பட்ட பாரிய தீ காரணமாக சந்ததையின் பெரும் பகுதி தீயினால் எரிந்து பல இலட்சங்கள் பெறுமதியான சொத்துக்கள் அழிவடைந்திருந்தன. இதனை தொடர்ந்து  கிளிநொச்சி மாவட்டத்திற்கான தீயணைப்பு பிரிவு ஒன்றின்  தேவை குறித்து பல தரப்பினர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்தன.

இதற்கமைவாக மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் அவர்களினால் 97 மில்லியன் அமைச்சின் ஊடாக ஒதுக்கப்பட்டு பணிகள் பூர்த்தி செய்யப்பட்டு இன்று உத்தியோக பூர்வமாக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன், மாவட்ட அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம், மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் சுரேஸ், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிபிள்ளை, தவநாதன், கரைச்சி பிரதேச சபையின் தவிசாளர் சபையின் உறுப்பினர்கள், என பலர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வு மூன்று மணிக்கு இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்ட  நிலையில் அதிகாரிகள் மாகாணசபை உறுப்பினர்கள் பிரதேசசபை தவிசாளர் உறுப்பினர்கள்  ,பொலிஸார் ,மக்கள்  என பலரும் குறித்த நேரத்திற்கு வருகைதந்த நிலையிலும் மீள்குடியேற்றம் புனர்வாழ்வு அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் அவர்கள் குறித்த நேரத்திற்கு வருகைதராததால் நீண்டநேரக் காத்திருப்புக்கு பின்னர் மூன்று மணியலவிலேயே நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31