மிகப்பெரும் இராணுவப் பயிற்சி ; 3 இலட்சம் ரஷ்ய துருப்புக்களுடன் சீன, மங்கோலிய இராணுவம்

Published By: R. Kalaichelvan

11 Sep, 2018 | 06:07 PM
image

வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு 3 இலட்சம் இராணுவ வீரர்களுடன் மிகப்பெரும் இராணுவப் பயிற்சியை (வோஸ்டொக்-2018)  ரஷ்யா முன்னெடுத்து வருகின்றது.

கிழக்கு சைபீரியாவில் இன்று  ஆரம்பமாகி ஒரு வாரம் நடைபெறும் இந்த பயிற்சியில் 3 இலட்சம் இராணுவ வீரர்கள், 36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், ஆயிரம் விமானங்கள் மற்றும் 80 போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றன.

மேலும் ரஷ்ய படையில் சமீபத்தில் இணைக்கப்பட்ட இஸ்கந்தர் ஏவுகணைகள், டி-80 மற்றும் டி-90 பீரங்கிகள், எஸ்.யு.34, எஸ்.யு.35 போர் விமானங்கள் என ஏராளமான இராணுவ தளவாடங்களும் இந்த இராணுவ பயிற்சியில் பயன்படுத்தப்படுகின்றன. 

இந்த பயிற்சியில் சீன இராணுவத்தை சேர்ந்த 3 ஆயிரத்து 200 வீரர்கள் மற்றும் மங்கோலிய இராணுவ வீரர்களும் கலந்து கொள்கிறார்கள்.

இது குறித்து ரஷ்ய இராணுவ அமைச்சர் செர்ஜெய் ஷோயிகு தெரிவிக்கையில்,

‘36 ஆயிரம் இராணுவ வாகனங்கள், பீரங்கிகள், கவச வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் பயிற்சியில் ஈடுபடுவதை கற்பனை செய்து பாருங்கள். இவை அனைத்தும் முடிந்தவரை ஒரு போர் போன்ற சூழ்நிலையை உருவாக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.

உக்ரைன் மற்றும் சிரியாவில் ரஷ்யாவின் மோதல்போக்கு, மேற்கத்திய நாடுகளின் நலன்களில் ரஷ்யாவின் தலையீடு போன்ற விவகாரங்களால் ரஷ்யாவுக்கும், மேற்கத்திய நாடுகளுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு இருக்கும் நிலையில், இந்த போர் பயிற்சி மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ள நிலையில்,  இந்த பயிற்சிக்கு நேட்டோ அமைப்பும் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47