மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளில் 1811 பேர் குடும்பக் கட்டுப்பாடு (family planning) செய்துள்ளதாக வைத்தியசாலை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2011 ஆம் ஆண்டு 379 பேரும் 2012 ஆம் ஆண்டு 606 பேரும் 2013 ஆம் ஆண்டு 343 பேரும் கடந்த ஆண்டு 483 பேரும் இவ்வாறு குடும்பக்கட்டுப்பாடு செய்துள்ளதாக அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை இவ்வைத்தியசாலையில் பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள் குறைவடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் இரு தாய்மார்கள் மாத்திரமே பிரசவத்தின்போது மரணமாகியுள்ளனர்.