தென் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பதுளை, ஊவா மாகாண சபைக்கு முன்பாகவுள்ள சுற்றுவட்டத்தில் சத்தியாக்கிரகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் கற்பிக்கும் பாட அலகுகள் தயாரிக்கப்படாமை, விரிவுரையாளர்கள் போதியளவு இல்லாமை, விரிவுரை மண்டபம் இல்லாமை, பட்டத்திற்கு வரவேற்பின்மை, நான்கு வருட பட்டத்தை மூன்று வருடத்தில் நிறைவு செய்கின்றமை, இருவருடங்களாகியும் பரீட்சைகள் நடாத்தப்படாமை ஆகிய கோரிக்கைகளை முன்னிலைப்படுத்தி நாடளாவிய ரீதியில் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

போராட்டம் நாடளாவிய ரீதியில் சுற்றுவட்ட சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெறும்போது, கொழும்பில் 53 நாட்களாக தொடர் சத்தியாக்கிரக போராட்டம் இடம்பெற்று வருகின்றது.

குறிப்பிட்ட பல்கலைகழகத்தில் 284 மாணவர்கள் வகுப்பு பகிஸ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.