அனைத்துலக தற்கொலை தடுப்பு தினத்தையொட்டி வவுனியா மனநல சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட விழிப்புணரவு ஊர்வலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வவுனியா மன்னார் வீதியில் உள்ள பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தில் ஆரம்பமாகி நகர வீதிகள் வழியாக நகரசபை கலாசார மண்டபத்தில் சென்று முடிவடைந்தது.

ஊர்வலத்தின் முடிவில் கலாசார மண்டபத்தில் விழிப்புணர்வு கூட்டமும் நடைபெற்றது.

ஊர்வலத்தில் வவுனியா அரசாங்க அதிபர் எம்.எம்.ஹனிபா, மேலதிக அரசாங்க அதிபர், சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் அதிகாரிகள், உளநல வைத்திய நிபுணர் டாக்டர்.எஸ்.சிவதாஸ், சிரேஸ்ட உளநல வைத்தியர் சுதாகரன், உள்ளிட்ட முக்கியஸ்தர்கள்,

 வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், சுகாதாரத் துறைசார்ந்த பணியாளர்கள், தாதிய கல்லூரி, கல்வியல் கல்லூரி மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், மாற்றுத்திறனாளிகள் என பலதரப்பட்டவர்களும் கலந்து கொண்டனர்.

வருடமொன்றுக்கு 8 இலட்சம் பேர் தங்களைத் தாங்களே மாய்த்துக் கொள்கின்றனர். இதன்படி 40 செக்கன்களுக்கு ஒருவர் என்ற ரீதியில் உலகில் தற்கொலை இடம்பெற்று வருகின்றது இதனைத் தடுக்கும் வகையில தற்கொலையைத் தடுக்க ஒன்றிணைவோம் என்ற தொனிப்பொருளில் நடப்பாண்டுக்கான தற்கொலையைத் தடுப்பதற்கான விழிப்புணர்வு செயற்பாடு முன்னெடுக்கப்படுகின்றது.