சம்மாந்துறை பிரதேசத்தில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

நேற்று அதிகாலை 1.00 மணியளவில் சம்மாந்துறை உடங்கா-2 கிராமத்துக்குள் புகுந்த காட்டு யானைகள் ஐந்து வீடுகளை சேதப்படுத்தியதுடன், பயிர்ச்செய்கைகளையும் துவம்சம் செய்துள்ளதாக மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். 

இந்நிலையில் பாதிக்கப்பட்ட இப்பிரதேசத்துக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம்.மன்சூர் சென்று பார்வையிட்டதுடன், வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு இக்கிராமத்தை காட்டு யானைகளின் அட்டகாசத்திலிருந்து பாதுகாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பணிப்புரை விடுத்தார்.