சட்டவிரோதமான முறையில் படகு மூலம் சென்ற 88 பேர் சர்வதேச கடற் பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் இன்று கொழும்பு, ரங்கல கடற்படை முகாமிற்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரியொருவர் தெரிவித்தார்.