நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் பணியாற்றும்  பல் வைத்தியர் ஒருவரின் வீட்டில் புகுந்து அங்கிருந்த 10 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகளை திருடிய நபர் ஒருவரை நீர்கொழும்பு பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் மீரிகமையில் வைத்து கைதுசெய்துள்ளனர். 

நீர்கொழும்பு பெரியமுல்லையில் அமைந்துள்ள முறைப்பாட்டாளரான வைத்தியரின் வீட்டிற்குள் பகல் வேளையில் புகுந்த சந்தேக நபர்  அங்கிருந்த நகைகளை திருடியுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

சந்தேக நபர் வைத்தியரின் வீட்டிற்கு அருகில் இருந்த வடிகான் வழியாக நுழைவது அருகில் இருந்த சி.சி.ரி.வி கமராவில் பதிவாகியுள்ளது. 

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் 30 வயதுடைய மீரிகமை பிரதேசத்தைச் சேர்ந்தவராவார். சந்தேக நபர் மீரிகமை பிரதேசத்தில் உள்ள நகை விற்பனை நிலையத்தில் கொள்ளையிட்ட நகைகளை விற்பனை செய்த நிலையில் பொலிஸாரால் நகை கைப்பற்றப்பட்டுள்ளது.