குடிநீர் போத்தலால் சபையில் சர்ச்சை

Published By: Digital Desk 4

11 Sep, 2018 | 03:09 PM
image

கரைச்சி பிரதேச சபையின் ஏழாவது அமர்வின் போது சபை உறுப்பினர்களுக்கு   ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட போத்தல்களில் உறுப்பினர்களின் முன்னிலையில் நீர் நிரப்பட்டு வழப்பட்டமையினால் சபையில் சர்ச்சை ஏற்பட்டது.

இது தொடர்பில் அமர்வில் கலந்துகொண்ட பல உறுப்பினர்கள் தங்களது கடும் ஆட்சேபனையை தெரிவித்திருந்தனர்.  இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கரைச்சி பிரதேச சபையின் ஏழாவது அமர்வு  தவிசாளர் அ.வேழமாலிகிதன் தலைமையில் நேற்று காலை ஒன்பது முப்பது மணிக்கு ஆரம்பமானது. 

இதன்போது சபையில் கலந்துகொண்ட உறுப்பினர்களுக்கு  பணியாளர்களால் குடிநீர் விநியோகிப்பட்டது. ஆதாவது ஏற்கனவே  பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட ஒரு லீற்றர் கொள்லளவு வெறும்  போத்தல்கள் 35 க்கு மேற்பட்டவை காட்போட் பெட்டி ஒன்றில் சபை மண்டபத்திற்குள் கொண்டுவரப்பட்டு அங்கு ஏற்கனவே வைக்கப்பட்டிருந்த நீர் நிரப்பிய பெரிய போத்தல்களிலிருந்து குறித்த போத்தல்களில் நீர் நிரப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

இதன்போது சில சந்தர்ப்பங்களில் பணியாளர்கள் போத்தல்களில் நிரப்பிய நீரை அவதானித்த பின்  அதனை வெளியே கொண்டு சென்று ஊற்றுவிட்டு மீண்டும் குறித்த போத்தல்களில் நீர் நிரப்பட்டு உறுப்பினர்களுக்கு வழங்கினார்கள்.

இது சபையில்  உறுப்பினர்களுக்கிடையே கடும் விசனத்தை ஏற்படுத்தியது. ஜக்கியதேசிய கட்சியின் உறுப்பினர் வைத்தியர் விஜயராஜன் தெரிவிக்கையில்,  

நாங்கள் சுகாதாரத்தை பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம் ஆனால் இங்கு சுகாதாரத்திற்கு முற்றிலும் புறம்பான செயற்பாடு இடம்பெறுகிறது. என்றும் இந்த போத்தல்கள் ஒரு தடவை மாத்திரமே பயன்படுத்தப்படல் வேண்டும் என்றும்  அதற்கேற்ற வகையில்தான் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார். அத்தோடு சிறிலங்கா சுதந்திர கட்சியின் உறுப்பினர் அசோக்குமாரும் தனது கண்டனத்தை தெரிவித்தார். 

பின்னர் பிற்பகல் சபை அமர்வின் போது புதிதாக போத்தல் நீர் கொள்வனவு செய்யப்பட்டு விநியோகிப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01