வலு வினைத்திறன் மேம்படுத்தல் பிரிவில் சிறந்த வலுச் சேவைகள் கம்பனிக்குரிய கோல்ட் பிளேம் விருதை ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனம் தனதாக்கியிருந்தது. வலு முகாமைத்துவ செயற்பாடுகளினூடாகரூபவ் குறைந்தளவு வலுப்பாவனைக்கான பங்களிப்பை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்பட்டிருந்தது. “விதுல்க” தேசிய வலு வினைத்திறன் விருதுகள் வழங்கும் நிகழ்வு 2018 அண்மையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பங்கேற்புடன் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனத்துக்கான விருது வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மின்வலு மற்றும் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி அமைச்சு மற்றும் இலங்கை நிலைபேறான வலு அதிகார சபை ஆகியவற்றினால் வருடாந்தம் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது. 

மின்வலு மற்றும் வலுச்சக்தியுடன் தொடர்புடைய சகல துறைகளிலும் வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் புதுப்பிக்கத்தக்க வள மூலங்களை பயன்பாட்டை மேம்படுத்தல் ஆகிய இலக்குடன் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்படுகிறது.

வெற்றிகரமான வலு வினைத்திறன் செயற்திட்டங்களை சமர்ப்பிக்கும் நிறுவனங்கள் மற்றும் வலு மூலங்களை சிறந்த வகையில் நிர்வகிக்கும் நிறுவனங்கள் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வில் கௌரவிக்கப்படுகின்றன. 

இந்த ஆண்டு தங்கவிருதுகள் நான்கு பிரிவுகளில் வழங்கப்பட்டிருந்தன. 

வலு வினைத்திறனில் எய்திய சாதனைகள்,வலு வினைத்திறனில் தொழில்நுட்ப உதவி,பாரியளவு ஹோட்டல்கள் மற்றும் சிறியளவிலான உற்பத்திகள் போன்றன அடங்கியுள்ளன.

ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனத்தினால் தற்போது ஸ்டீம் மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள்,வலு முகாமைத்துவம், தொழிற்துறை கைகோர்ப்பு,செயற்திட்ட முகாமைத்துவம் மற்றும் பிரயோகம் போன்றன தொடர்பான ஆலோசனை சேவைகள் வழங்கப்படுவதுடன்,ஸ்டீம் மற்றும் கட்டுப்பாட்டு சாதன கட்டமைப்புகள் விநியோக செயற்பாடும் மேற்கொள்ளப்படுகிறது. 

நாட்டில் அதிகளவு தங்கியிருக்கக்கூடிய தொழிற்துறைசார் சேவை வழங்குநராக ஃபோர்ப்ஸ் மார்ஷல் லங்கா பரந்தளவு கௌரவிக்கப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களால் ஃபோர்ப்ஸ் மார்ஷலின் தயாரிப்புகள்ரூபவ் சேவைகள் மற்றும் தீர்வுகள் போன்றவற்றில்

காண்பிக்கப்படும் நம்பிக்கை என்பது,நிறுவனத்துக்கு இந்த தங்க விருதை வெற்றியீட்ட ஏதுவாக அமைந்துள்ளது.

நிறுவனத்தினால் சுமார் 7 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான படிம எரிபொருளை சேமிக்க முடிந்ததுடன் கடந்த ஆண்டில் தேசத்துக்கும்ரூபவ் அதன் வாடிக்கையாளர்களுக்கும் 550 மில்லியன் ரூபாய்க்கு அதிகமான தொகையை சேமித்துக்கொள்வதற்கு உதவியாக அமைந்திருந்தது. 

மேலும்,அதன் தீர்வுகளினால் 14 கிலோகிராமுக்கு அதிகமான விறகுகளை சேமிக்கக்கூடியதாக இருந்ததுடன்,100 மில்லியன் லீற்றருக்கு அதிகமான நீரை சேமிக்கவும்,4 மில்லியன் மின்சார அலகுகளை (kWhs)சேமிக்கக்கூடியதாக இருந்தது.

ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனத்தின் சர்வதேச செயற்பாடுகளுக்கான பணிப்பாளர் சுனில் பதமி கருத்துத்தெரிவிக்கையில், 

“தேசிய மட்டத்தில் தங்க விருதை வென்றுள்ளமையானது,வலு வினைத்திறன் மற்றும் கட்டுப்பாட்டுசாதனச் செயற்பாடுகளில்ரூபவ் எதிர்காலத்தில் இலங்கையின் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும் தேவைகளையும் நிவர்த்தி செய்ய எம்மை ஊக்குவிக்கும். 

எமது வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த நேர்த்தியான கருத்துப்பகிர்வுகள் மற்றும் பரிந்துரைப்புகள் போன்றன எமது வியாபாரத்தை சர்வதேச மட்டத்தில் தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

 25 வருடங்களுக்கு மேலாக எமது வாடிக்கையாளர்களுடன் கைகோர்த்துள்ளமையையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைவதுடன்,எதிர்காலத்தில் அவர்களுடன் பணியாற்ற நாம் எதிர்பார்க்கிறோம். 

பரிந்துரைப்புகள்,சிந்தனைகள், ஊக்குவிப்பு மற்றும் உதவிகள் போன்றவற்றுக்காக எமது வாடிக்கையாளர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்” என்றார்.

ஃபோர்ப்ஸ் மார்ஷல் தெற்காசிய செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி தீபக் சர்மா கருத்துத் தெரிவிக்கையில்,“கடந்த 25 வருட காலமாக எம்மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு நாம் நன்றி தெரிவிக்கிறோம். எதிர்வரும் ஆண்டுகளில் எமது பங்காண்மையை நாம் மேம்படுத்திக் கொள்ள எதிர்பார்த்துள்ளோம். 

ஆலை மட்டத்தில் வலுவினைத்திறனை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதுடன், அறிவு மேம்படுத்தல் தொடர்பிலான எமது கவனம் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதுடன்,அந்த அறிவானது வெற்றிகரமான வகையில் வலு வினைத்திறன் வாய்ந்த ஆலையை முன்னெடுத்துச் செல்ல உதவியாக அமைந்திருக்கும்” என்றார்.

ஃபோர்ப்ஸ் மார்ஷல் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான செயற்பாட்டு முகாமையாளர் லோஷன் பலயன்கொட கருத்துத் தெரிவிக்கையில், 

“கடந்த ஆண்டில் வலு பாதுகாப்பு மற்றும் எரிபொருள் மாற்றல் துறையில் நாம் 30 செயற்திட்டங்களை பூர்த்தி செய்திருந்தோம். 

150க்கும் அதிகமான வலு மீளாய்வுகள் மற்றும் 7பரிபூரண வலு மீளாய்வுகள் போன்றவற்றை வெவ்வேறு துறைகளில் முன்னெடுத்திருந்தோம். 

200க்கும் அதிகமான நிபுணர்கள் மற்றும் 100க்கும் அதிகமான பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஸ்டீம் பொறியியல் மற்றும் வலு பாதுகாப்பு தொடர்பில் நாம் பயிற்றுவித்திருந்ததையிட்டு பெருமை கொள்கிறோம். 

எதிர்வரும் காலங்களிலும் எமது பெறுமதி வாய்ந்த வாடிக்கையாளர்களுக்கு சேவைகளை பெற்றுக் கொடுக்க நாம் எதிர்பார்க்கிறோம்” என்றார்.

ஸ்டீம் பொறியியல் மற்றும் கட்டுப்பாட்டு சாதனங்கள் தீர்வுகள் போன்றவற்றை வழங்குவதில் ஃபோர்ப்ஸ் மார்ஷல் முன்னணியில் திகழ்வதுடன், 70 வருடங்களுக்கு மேலாக இதன் தயாரிப்புகள் மற்றும் சேவைகள் போன்றவற்றினூடாக தொழிற்துறைகளுக்கு வலு சேமிப்புரூபவ் செயன்முறைகளின் தரத்தை மேம்படுத்தல், தூய மற்றும் பாதுகாப்பான தொழிற்சாலையை முன்னெடுத்துச் செல்ல பங்களிப்பு வழங்கப்பட்டுள்ளது. 

19 க்கும் அதிகமான நாடுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ளதுடன், 5 உற்பத்தி நிலையங்களை பேணி வருகிறது. நிறுவனத்தின் அறிவு,புத்தாக்கமான தீர்வுகள்,தங்கியிருக்கும் தயாரிப்புகள் மற்றும் சர்வதேச பிரசன்னம் போன்றன நம்பத்தக்க பங்காளராக திகழச் செய்துள்ளது.

ஃபோர்ப்ஸ் மார்ஷல் லங்கா, இலங்கையில் 25 வருடங்களுக்கு மேலான பிரசன்னத்தைக் கொண்டுள்ளது. 

கட்டுப்பாட்டு சாதன கட்டமைப்புகள், ஸ்டீம் பொயிலர்கள் மற்றும் உதிரிப்பாகங்கள் போன்றவற்றுக்கு சந்தை முன்னோடியாக திகழ்கிறது. உயர் கட்டமைப்பு தங்குதிறனுடன் தொழிற்துறைகளுக்கு சிக்கனமான தீர்வுகளை வழங்கி வருகிறது. 

ஸ்டீம் பொறியியல் பயிற்சி நிலையமொன்றை பேராதனை பல்கலைக்கழக வளாகத்தில் நிறுவ உதவியிருந்ததுடன், இதனூடாக இலங்கையின் பொறியியலாளர்களுக்கு வலு வினைத்திறன் தொடர்பில் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.