எஸ்.எல்.டி. ஸ்பீடப் சைக்கிள் சவாரித் தொடரில் ஒட்­டு­மொத்த சம்­பியன் பட்­டத்தை கிஹான் புஷ்­ப­கு­மார வென்றார்.

5 நாட்­க­ளாக நடை­பெற்ற இத் தொட­ரா­னது கொழும்பில் ஆரம்­பித்து மொத்தம் 821 கிலோ மீற்றர் பயணம் செய்து குளி­யாப்­பிட்­டியில் நிறை­வ­டைந்­தது.

இப் போட்டித் தொடரின் ஒட்­டு­மொத்த சம்­பி­யனாக தெரி­வான கிஹான் பந்­தயத் தூரத்தைக் கடப்பதற்கு 20 மணிநேரம், 7 நிமி­டங்கள், 7 வினாடி­களை எடுத்­துக்­கொண்டார்.

இதில் இரண்­டா­மி­டத்தை மது­ஷங்­கவும் மூன்றாமிடத்தை விரான் ரமேஷும் வென்றமை குறிப்பிடத்தக்கது.