அனுராதபுரம் சாலியபுரப் பிரதேசத்தில் அயல் வீட்டில் 19 மாங்காய்களை பிடுங்கிய பெண்ணொருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி வரை அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற நீதிபதி ஒத்திவைத்தார்.

குறித்த பகுதியில் உள்ள பெண் ஒருவர் அயல் வீட்டு பெண்ணொருவர் தனது வீட்டு மாமரத்திலுள்ள 19 மாங்காய்களை திருடியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். 

இதனையடுத்து குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்த நிலையில் அவர் தான் அனுமதியின்றி மாங்காயை பிடுங்கவில்லை எனவும் கறி சமைப்பதற்கு 3 மாங்காயை மாத்திரம் பிடுங்கியதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் 

இந்நிலையில் நேற்று திங்கட்கிழமை அனுராதபுரம் நீதவான் நீதிமன்ற மேலதிக நீதபதி ஹர்சகெகனுவெல முன்னிலையில் வழக்கு  பொருளாக பிடுங்கிய 19 மாங்காய்களை ஆவணப்படுத்தலுடன் ஆஜர்செய்யப்பட்ட போது நீதபதி இவ் வழக்கை எதிர்ரும் ஒக்டோபர் மாதம் 2 ஆம் திகதி ஒத்திவைத்தார்.