லிந்துல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  தங்கக்கலை தோட்ட மேற் பிரிவிலுள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் கதவு உடைக்கப்பட்டு அங்கிருந்த உண்டியல் பணமும் அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த தங்க நகைகளும் திருடப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்தனர். 

இச்சம்பவம்  நேற்றிரவு இடம்பெற்றுள்ளதோடு சம்பவம் தொடர்பில் லிந்துல பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரனைகளை ஆரம்பித்துள்ளனர். களவு போன பொருட்களின் பெறுமதி தொடர்பில் மதிப்பிடுகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆலய கட்டுமானத்திற்காக வைக்கப்பட்டிருந்த சில பொருட்களும் திருடப்பட்டுள்ளதாக  பிரதேச மக்கள் தெரிவித்தனர்.