முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வரும் யோகி பாபு இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் கதையின் நாயகன் ஆகியிருக்கிறார்.

டார்லிங், எனக்கு இன்னோரு பேர் இருக்கு, 100 ஆகிய படங்களை இயக்கிய இயக்குநர் சாம் ஆண்டன் இயக்கத்தில் உருவாகும் புதிய பெயரிடப்படாத படத்தில் கதையின் நாயகனாக யோகி பாபு நடிக்கவிருக்கிறார். 

இது குறித்து இயக்குநர் தெரிவிக்கையில், ‘தனியார் பாதுகாப்பு ஊழியராக இருக்கும் ஒருவர் பணயக்கைதியாக பிடிக்கப்படுகிறார். அவருடன் ஒரு நாயும் இருக்கிறது. 

இவர்களை மையப்படுத்திய திரைக்கதையொன்றை யோகி பாபுவிடம் சொன்னேன். அவருக்கு பிடித்துவிட்டதால் கதையின் நாயகனாக நடிக்க சம்மதித்திருக்கிறார். 

விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.’ என்றார் இயக்குநர் சாம் ஆண்டன்.

நயன்தாரா நடிப்பில் வெளியான ‘கோலமாவு கோகிலா ’வின் வெற்றியில் யோகி பாபுவின் நகைச்சுவை முக்கிய இடம்பெற்றிருந்தது என்பதை அனைவரும் அறிவர்.