பேர்த்தில் மூன்று குழந்தைகள் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐவரை  கொலை கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தந்தையே தனது பிள்ளைகளையும் மனைவியையும் மனைவியின் தாயையும் கொலை செய்துள்ளார்.

இவர்களை கொலை செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள தந்தையை பொலிஸார் இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்துள்ளனர்.

அன்டொனி ரொபேர்ட் ஹார்வே என்பவரே கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவர் தனது பிள்ளைகளான மூன்றரை வயது சார்லட்டோ ஹார்வே,இரண்டு வயது இரட்டையர்களான அலைஸ்  மற்றும் பீட்ரிக்ஸ் ஹார்வேயையும்,அவர்களின் தாயார் மரா குயினையும் மூன்றாம் திகதி படுகொலை செய்துள்ளார்.

மேலும்   அவர் நான்காம் திகதி மரா குயினின் தாயை கொலை செய்துள்ளார்.

பேர்த்தின் புறநகர் பகுதியில் உள்ள பெட்போர்ட்டில் உள்ள வீட்டில் காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர்.

கத்திகளை பயன்படுத்தியே ஹார்வே இந்த கொலைகளை புரிந்துள்ளார்.

ஹார்வேயின் மனைவியினதும் மனைவியினது தாயரினதும் உடல்களை சமையலறையில் மீட்டோம்  குழந்தைகளின் உடல்களை ஏனைய அறைகளில் மீட்டோம் என  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஹார்வே கொலைகளை புரிந்த பின்னர் அந்த வீட்டிலேயே சில நாட்கள் தங்கியிருந்துள்ளார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.