பொலன்னறுவை பகுதியில் தந்தை ஒருவர் தனது இரு மகன்களுடன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலன்னறுவை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலன்னறுவை போவத்த வெளிகந்த பகுதியிலேயே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதில் 40 வயதுடைய தந்தை, 11 வயது மற்றும் 4 வயதுடைய அவரது இரு மகன்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பொலன்னறுவை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது