டீ. ஏ. ராஜபக்ஷவுக்கு நினைவுத்தூபி  அமைத்ததை  நாட்டின் பாரிய பொருளாதார வீழ்ச்சிக்கு காரணமாகியதாக காண்பிக்க முற்படுகின்றனர் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

அரசாங்கத்திற்கு எதிராக குரல் கொடுப்பவர்களை பழிவாங்குவதற்காகவே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகளை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

டி.ஏ.ராஜபக்ஷ  ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணப் பணிகளின் போது அரச பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சிறப்பு  மேல் நீதிமன்றில்  இன்று திங்கட்கிழமை ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.