வவுனியாவிலுள்ள கட்டிடப் பொருட்கள் (ஹாட்வெயார்) விற்பனை நிலையங்களிலிருந்து மணல் எடுத்துச் செல்வதில் நீண்டகாலமாக இருந்து வந்த நெருக்கடி நிலைக்கு இன்று வர்த்தகர் சங்கத்தில் பொலிஸாருடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது.

வவுனியாவிலுள்ள கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் விற்பனை செய்யப்படும் மணல் டிப்பர், உழவு இயந்திரங்களில் சிறிய தேவைகளுக்காக வெளியே எடுத்துச் செல்வதில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வந்தது.

இந்த நெருக்கடி நிலைக்கு இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் பொலிஸாரினால் பதிவு செய்யப்பட்ட ஹாட்வெயார் நிலையங்களிலிருந்து விற்பனை நிலையத்தின் பற்றுச்சீட்டுடன் 10 கிலோ மீற்றர் தூரத்திற்கு ஒரு கீப் மணல் எடுத்துச் செல்வதற்கு பொலிஸார் அனுமதியளித்துள்ளனர்.

வவுனியாவில் நீண்டகாலமாக  வர்த்தகர்களுக்கு இருந்து வந்த நெருக்கடி நிலை இன்று வவுனியா பொலிஸ் உயர் அதிகாரிகளுடன் வர்த்தகர் சங்கத்தில் கட்டிடப் பொருட்கள் விற்பனை நிலைய உரிமையாளர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே வர்த்தகர் சங்கத்தினால் பொலிஸாரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மர ஆலைகள் உரிமையாளர்களும் இன்றைய கலந்துரையாடலில் கலந்துகொண்டனர். 

-பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டு விற்பனை நிலைய உரிமையாளர்களுக்கு பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்கள் தொடர்பாகவும் விளக்கமளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.