(நா.தனுஜா)

நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகளுக்கு அவர்கள் இலங்கையில் கொள்வனவு செய்த பொருட்களுக்கான பெறுமதிசேர் வரியில் 15 சதவீதத்தை மீள்செலுத்தும் திட்டமொன்றினை நடைமுறைப்படுத்தவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு தெரிவித்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

எமது நாட்டுக்கு வருகைதரும் சுற்றுலாப்பயணிகள் நாட்டில் தங்கியிருந்த காலப்பகுதியில் கொள்வனவு செய்கின்ற பொருட்களுக்கான பெறுமதிசேர் வரியில் 15 சதவீதத்தை மீளச்செலுத்துவதற்கான திட்டமொன்று நாளைய தினத்திலிருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இத்திட்டத்திற்கென விசேட கொடுப்பனவு மற்றும் பெறுவனவு நிலையமொன்று கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நாளைய தினம் நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீரவினால் திறந்து வைக்கப்படவுள்ளது