(எம்.மனோசித்ரா)

பாராளுமன்றத்தில் 70 அங்கத்தவர்களைக் கொண்டு இரண்டாவது பெரும்பான்மையை கொண்டுள்ள பொது எதிரணிக்கு எதிர்கட்சி தலைவர் பதவியை வழங்காமையினாலேயே சபாநாயகர் தலைமையிலான சர்வகட்சி பாராளுமன்ற குழுவின் இந்திய விஜயத்தை நிராகரித்ததாக தெரிவித்த கூட்டு எதிர்கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, உள்நாட்டு பாராளுமன்ற நடவடிக்கைகைள் தொடர்பில் தவறானதொரு நிலைப்பாட்டை இந்தியாவிற்கு காண்பிக்க முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டார். 

சபாநாயகர் கருஜயசூரியவுடனான இந்திய விஜயத்தை நிராகரித்தமை தொடர்பில் வினாவிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கை பாராளுமன்றத்தின் உண்மைதன்மையை இந்தியாவிற்கு மறைத்து பிழையாக காண்பிக்க முயற்சிக்கின்றனர். அதற்கு நாம் ஒத்துப் போகமாட்டோம். இந்திய பாராளுமன்றத்தை ஏமாற்றுவதற்கான இவர்களின் முயற்சிக்கும் நாம் இனங்கமாட்டோம். 

எனவே தான் இந்த அழைப்பை பொது எதிரணியாக நிராகரித்துள்ளோம் என்றார்.