(இராஜதுரை ஹஷான்)

விஷம் கலந்த பாலை அருந்தியதாலேயே பொது எதிரணியினரது போராட்டம் தோல்வியடைந்தது என்று பொது எதிரணியினர் குறிப்பிடுகின்றனர். 

உணவு ஒவ்வாமையின் காரணமாக வைத்தியசாலையில் 81 பேர் மாத்திரமே கலந்துக் கொண்டனர். அவ்வாறு என்றால் போராட்டத்தில் 81 பேர் மாத்திரமா கலந்துக் கொண்டனர் என பாராளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் கேள்வியெழுப்பியுள்ளார்.

இக்குற்றச்சாட்டு  உண்மைக்கு புறம்பானதாகும். ஆகவே பொலிஸ்மா அதிபர் இவ்விடயம் தொடர்பில்  விசேட கவனம் செலுத்தி விசாரணைகளை முன்னெடுத்து  உண்மையினை பகிரங்கப்படுத்த வேண்டும். அனைத்து விதமான விசாரணைகளுக்கும் தயார் எனவும் தெரிவித்தார்.

பால் பக்கெட்டில் விஷம் கலந்ததாக குற்றஞ்சாட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச மற்றும் செஹான் சேமசிங்கவிற்கு எதிராக சட்ட நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் குறிப்பிட்டார்.

ஐக்கிய  தேசிய கட்சியின் தலைமையகமான சிறிகொதாவில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.