முதற்­கட்ட புனர்­வாழ்வு குழுவில் 20பேர் : சட்­டமா அதி­பரின் அறி­விப்பால் சர்ச்சை

23 Nov, 2015 | 12:19 PM
image

தமிழ் அர­சியல் கைதி­க­ளுக்கு புனர்­வாழ்வு வழங்கும் பொறி­மு­றையின் கீழ் சட்­டமா அதிபர் முதற்­கட்ட குழு­வினர் தொடர்­பான அறி­விப்பை வெளியிட்­டுள்ள நிலையில் அது பலத்த சர்ச்­சை­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

குறிப்­பாக இக்­கு­ழு­வி­னரில் உள்­ள­டங்­குவோர் குற்­றங்­களை ஏற்­றுக்­கொள்ளும் பட்­சத்தில் அவர்­க­ளுக்கு சிறிய தண்­டனைக் காலம் வழங்­கப்­படும். அதனைத் தொடர்ந்தே புனர்­வாழ்­வுக்குச் செல்ல முடி­யு­மென அறி­விக்­கப்­பட்­டுள்­ளது.


மேலும் ஒரு­வ­ருக்கு பல வழக்­குகள் காணப்­ப­டு­கின்­ற­மையால் ஒரு வழக்கின் அடிப்­ப­டையில் புனர்­வாழ்வு பொறி­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போதும் ஏனைய வழக்­குகள் தொடர்பில் தீர்ப்பு அல்­லது எடுக்­கப்­ப­ட­வேண்­டிய அடுத்த கட்ட நட­வ­டிக்கை அறி­விக்­கப்­ப­டாத நிலையில் அவர்கள் புனர்­வாழ்வு பொறி­மு­றைக்கு செல்ல முடி­யாத நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லையில் அறி­விக்­கப்­பட்­டுள்ள இரு­பது பேரில் மூவரே புனர்­வாழ்­வுக்குச் செல்லக் கூடிய நிலை காணப்­ப­டு­கின்­றது.

இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­தா­வது,


நீண்­ட­கா­ல­மாக தடுத்து வைக்­கப்­பட்டு தமிழ் அர­சியல் கைதி­களை ஒரு­வ­ரு­டத்­திற்கு உட்­பட்­ட­தான புனர்­வாழ்வுப் பொறி­மு­றைக்கு உட்­ப­டுத்தி விடு­தலை செய்­வ­தெ­னவும் எதிர்­வரும் 26ஆம் திக­திக்கு முன்­ன­தான முதற்­கட்ட குழு­வினர் வவு­னி­யாவில் அமைந்­துள்ள பூந்­தோட்டம் புனர்­வாழ்வு முகா­முக்கு அனுப்பி வைக்­கப்­ப­டு­வார்கள் எனவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.


கடந்த திங்­கட்­கி­ழ­மை­யன்று சிறைச்­சா­லைகள் மறு­சீ­ர­மைப்பு அமைச்சர் டி.எம்.சுவா­மி­நாதன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்­நா­யக்க, மற்றும் சட்­டமா அதிபர், தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ.சுமந்­திரன் உள்­ளிட்ட முக்­கிய அதி­கா­ரிகள் பங்­கெ­டுத்த முக்­கிய கூட்­டத்­தி­லேயே மேற்­கண்ட தீர்­மானம் எடுக்­கப்­பட்­டி­ருந்­த­தை­ய­டுத்து விடு­த­லையை வலி­யு­றுத்தி உண்­ணா­வி­ர­த­மி­ருந்த தமிழ் அர­சியல் கைதிகள் போராட்­டத்தை இடை­நி­றுத்­தி­யி­ருந்­தனர்.


இவ்­வா­றான நிலையில் புனர்­வாழ்வு பொறி­மு­றைக்கு உட்­ப­டுத்­தப்­ப­ட­வுள்ள இரு­பது தமிழ் அர­சியல் கைதி­களின் பெயர் விப­ரங்கள் வெளியி­டப்­பட்­டுள்­ளது.


அதன் பிர­காரம் கொழும்பு மேல் நீதி­மன்றில் வழக்­குகள் காணப்­படும், பாலச்­சந்­திரன் புஷ்­பராஜ், முகமட் இம்­ரான்கான், குல­சிங்கம் கோகு­லராஜ் ஆகி­யோரும் கண்டி மேல் நீதி­மன்றில் வழக்­குகள் காணப்­படும், விம­ல­சிங்கம் தன­யுகன், சுந்­த­ர­மணி சிவ­குமார், சூரி­ய­மூர்த்தி ஜீவோஷன் ஆகி­யோரும் இதே­மன்றில் ஒரே வழக்­குடன் தொடர்­புடை, விஷ்­வ­நாதன் ரமேஷ்­குமார், இரா­ம­நாதன் நவ­நீதன், தட்­ச­ணா­மூர்த்தி செல்­வ­குமார், வேலு யோக­ராஜா, டேவிட் சுரன்ஜித், கிரி­ஷாந்த பெர்­னாண்டோ, கோவிந்த சாமி சுந்­த­ர­மணி ஆகி­யோரும் வவு­னியா மேல் நீதி­மன்றில் வழக்­குகள் காணப்­படும் அஜித் பொன்­சேகா, குல­சிங்கம் கோகு­லராஜ், குழந்­தைவேல் தயா­பரன், கார்த்­தி­கேசு நாதன் ஆகி­யோரும் மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் வழக்­குகள் காணப்­படும், இரா­ம­சாமி கிருஷ்­ண­காந்தன், இரா­ச­லிங்கம் பார்த்­தீபன் ஆகி­யோரும் கொழும்பு மேல் நீதி­மன்றத்தில் வழக்குகள் உள்ள குண­ரத்­தினம் கஜேந்­திரன் சூரிய காந்தி ஜெயச்­சந்­திரன் ஆகி­யோரும் முதற்­கட்ட புனர்­வாழ்வு பொறி­மு­றைக்கு அனுப்­ப­ட­வுள்ள குழு­வி­னரில் அடங்­கு­வ­தாக அறி­விக்­கப்­பட்­டுள்­ளனர்.


இவர்­களில் பாலச்­சந்­திரன் புஷ்­பராஜ், முகமட் இம்­ரான்கான், குல­சிங்கம் கோகு­லராஜ், அஜித் பொன்­சேகா ஆகியோர் ஏற்­க­னவே பிணை­ய­ளிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளாவர். குண­ரத்­தினம் கஜேந்­திரன் விடு­த­லை­யாகி ஆறு மதங்கள் ஆகின்­றன. இவர்கள் தற்­போது புனர்­வாழ்வுப் பொறி­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர்.


அதே­நேரம் விஷ்­வ­நாதன் ரமேஷ்­குமார், இரா­ம­நாதன் நவ­நீதன், தட்­ச­ணா­மூர்த்தி செல்­வ­குமார், வேலு யோக­ராஜா, டேவிட் சுரன்ஜித் கிரி­ஷாந்த பெர்­னாண்டோ ஆகி­யோ­ருக்கு ஐந்து முதல் ஒன்­பது வழக்­குகள் வரையில் காணப்­ப­டு­கின்­றன. அவற்றில் ஒரு வழக்கின் அடிப்­ப­டை­யி­லேயே புனர்­வாழ்வுப் பொறி­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ளனர். இருப்­பினும் ஏனைய நான்கு வழக்குள் குறித்த தீர்ப்பு கிடைக்­கா­மை­யினால் இவர்­களை புனர்­வாழ்­வுக்கு அனுப்­பு­வது குறித்து சிக்­கல்கள் காணப்­ப­டு­கின்­றன.


அதே­போன்று சூரிய காந்தி ஜெயச்­சந்­தி­ர­னுக்கு மேல் நீதி­மன்றில் காணப்­படும் வழக்­கிற்கு அமை­வாக புன­வாழ்வு வழங்கும் பொறி­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டி­ருக்­கின்­ற­போதும் வவு­னியா மேல் நீதி­மன்றில் காணப்­படும் வழக்கில் இவ­ருக்கு பிணை வழக்­கப்­பட்­டுள்­ள­தோடு அநு­ரா­த­பு­ரத்தில் காணப்­படும் வழக்கு குறித்து எந்த தீர்ப்பும் அறி­விக்­கப்­ப­ட­வில்லை.


இரா­ம­சாமி கிருஷ்­ண­காந்­த­னுக்கு மட்­டக்­க­ளப்பு மேல் நீதி­மன்றில் காணப்­படும் வழக்கின் அடிப்­ப­டையில் புனர்­வாழ்வு பொறி­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­போதும் அவி­சா­வளை நீதி­மன்றில் அவ­ருக்கும் பிறி­தொரு வழக்கு காணப்­ப­டு­வ­தோடு யாழ்.நீதி­மன்றில் தாக்கல் செய்­யப்­பட்­டி­ருந்த வழக்கில் விடு­தலை செய்­யப்­பட்­டுள்ளார்.


இரா­ச­லிங்கம் பார்த்­தீ­ப­னுக்கு மட்­டக்­க­ளப்பு மன்றில் காணப்­படும் வழக்­கிற்கு அமை­வாக புன­ர்வாழ்வுப் பட்­டி­ய­லுக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார். எனினும் இவ­ருக்கு மொன­ரா­கலை மற்றும் அம்­பாந்­தோட்­டையில் வழக்­குகள் காணப்­ப­டு­கின்­றன. சூரி­ய­மூர்த்தி ஜீவோ­ஷ­னுக்கு நான்கு வழக்­குகள் காணப்­ப­டு­கின்ற நிலையில் கண்டி மேல் நீதி­மன்றில் காணப்­படும் வழக்­கொன்றின் அடிப்­ப­டையில் புனர்­வழ்வு பொறி­மு­றைக்குள் உள்­வாங்­கப்­பட்­டுள்ளார்.


இவ்­வா­றான நிலையில் குழந்­தைவேல் தயா­பரன், கார்த்­தி­கேசு நாதன், கோவிந்­த­சாமி சுந்­த­ர­மணி ஆகிய மூவர் மட்­டுமே தற்­போது புனர்­வாழ்­வுக்குச் செல்­லக்­கூ­டிய ஏது­நி­லை­களைக் கொண்­டுள்­ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

நுவரெலியா - லிந்துலை சிறுவர் பராமரிப்பு...

2024-04-16 16:28:10
news-image

சட்டவிரோதமாக காணிக்குள் நுழைந்து பெண்ணின் 14...

2024-04-16 16:23:03
news-image

நானுஓயா ரயில் நிலையத்தில் பயணிகள் அவதி!

2024-04-16 16:05:39
news-image

புத்தாண்டு நிகழ்வில் கிரீஸ் மரம் சரிந்து...

2024-04-16 16:02:02
news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09